பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தனது திரைபயணத்தை முதலில் நடிகர் விஜயுடன் தொடர்ந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான
“தமிழன்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த என்ட்ரி கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர். ஹோலிவுட் படங்களில் அதிக அளவு நடிக்க ஆரம்பித்தார். அதன் காரணமாக அமெரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்தது. அதுவும் வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டனர்.

அந்த குழந்தை பிறந்து தற்போது 7 மாதங்கள் மட்டுமே ஆள நிலையில் பிரியங்கா சோப்ரா அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள தயாராகி உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த குழந்தையையும் வாடகை தாய் மூலமாக பெற்றுக் கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதல் குழந்தை பிறந்து 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அடுத்த குழந்தைக்கு இவர்கள் தயாராகி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
