74 வயதில் இரட்டை குழந்தைகள்! அவசர சிகிச்சை பிரிவில் கணவன் – மனைவி! காத்திருக்கும் உறவுகள்!

ஆந்திராவைச் சேர்ந்தவர் ராஜா ராவ் (80 வயது). இவரது மனைவி மங்கையம்மா (74 வயது). மங்கையம்மாவுக்கு  சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவம் வெற்றிகரமாக முடிந்தாலும், மங்கையம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், அவரை ஐசியூ பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, அவரது கணவர் ராஜா ராவுக்கு, நுரையீரல் தொற்று ஏற்பட்டு, அவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  திருமணமான நாள் முதலாக, பல ஆண்டுகளாக குழந்தையின்றி வாடிய மங்கையம்மா, சமீபத்தில் செயற்கை கருவுறுதல் முறையில் கர்ப்பம் தரித்தார்.

இதன்படி, உலகிலேயே மிக அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த கணவன், மனைவி என்ற பெருமையை அவர்கள் பெற்றாலும், தற்சமயம் அவர்கள்  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது, அவர்களின் உறவினர்களை கவலையடைய செய்துள்ளது.