நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின பெரு விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை பலரும் பின்பற்று வரும் நிலையில் அந்த வரிசையில் திரை பிரபலங்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இதற்கு ஆதரவு தெரிவித்து நீலாங்கரையில் உள்ள தனது வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று இருக்கு மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளால் ஜொலிக்கின்றது. அதாவது நடிகர் விஜயின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும் இது விஜய்யின் ஏற்பாடா அல்லது வேறு யாராவது செய்துள்ளார்களா என்று தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விஜயின் வீடு அருகே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.