பிரதமர் சொன்ன ஒரே வார்த்தை…. அப்படியே பாலொவ் பண்ண நடிகர் ரஜினி….. இணையத்தில் தெறிக்கவிடும் ரசிகர்கள்…..!!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின பெரு விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை பலரும் பின்பற்று வரும் நிலையில் அந்த வரிசையில் திரை பிரபலங்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் டிபியாக தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அவரும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசியக்கொடி டிபிஐ வைத்துள்ள நிலையில் பலரும் அதனை பாலோ செய்து வருகிறார்கள்.

அதன்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி தனது ட்விட்டர் பக்க டிபி-ஐ தேசிய கொடியாக மாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் தனது வீட்டில் தேசியக் கொடியை அவர் ஏற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.