பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலை மக்கள் யாரும் மறந்துவிடமுடியாது. அந்த அளவிற்கு குடும்ப பெண்கள் மத்தியில் குறித்த சீரியல் அதிக வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் 5வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கிருஷ்ணா. நாயகியாக நடிகை வானிபோஜன் நடித்திருந்தார். வானிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்து கலக்கி வருகிறார்.

இதற்கிடையில், கிருஷ்ணா கடந்த 2012 ஆம் ஆண்டு திருடா திருடி பட கதாநாயகி “மன்மதராசா” பாடால் பேமஸ் சாயாசிங்கை திருமணம் செய்து கொண்டார். திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயாசிங் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் திருமணத்திற்குப் பின்னர் சீரியல் பக்கம் திரும்பிய சாயாசிங் திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அதில் தனது கணவர் கிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சன் குடும்ப விருதுகள் விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு தங்கள் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களையும் பகிர்ந்து கண்கலங்கி உள்ளார்கள். அப்போது பேசிய கிருஷ்ணா எங்களுக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், நான் என் மனைவிக்கு சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக கஷ்டங்களை மட்டுமே கொடுத்துள்ளேன் என்று கூறி மண்ணிப்பு கோரி தனது அன்பு மனைவிக்கு மண்டியிட்டு ரோஜா கொத்தை அளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் .இதனால் மகிழ்ச்சி அடைந்த சாயாது எனது வாழ்வில் இவரை விட ஒரு சிறந்த துணை கிடையாது என்று கண்கலங்கியபடி பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.