பொன்னேரியை சேர்ந்த தம்பதி திரேச்குமார் – கோமதி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திரேச்குமார் ஆந்திராவில் பணிபுரியும் நிலையில் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திரேச்குமார் கடைக்கு போய் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்க சொன்னார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையலறைக்கு சென்ற நிலையில் குழந்தையை கவனித்து கொள்ளுமாறு கணவனிடம் சொன்னார். அதற்கு திரேச்குமார் மறுத்ததோடு இது தொடர்பாக மனைவியுடன் சண்டை போட்டார். இதையடுத்து குழந்தையையும் கவனித்து கொண்டு எப்படி.

சமையலும் செய்வது என்று கோமதி கேட்க, திரேச்குமார் ஆத்திரமடைந்தார். அதனால் சரமாரியாக கோமதியை தாக்கியதுடன், கீழே கிடந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இறக்கச்செய்துள்ளார். பின்னர் கோமதி தூக்கிட்டுக்கொண்டதாக மாமியார் வீட்டுக்கு தகவல் சொன்னார். அதிர்ச்சியடைந்த அவர்கள், மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர்.

திரேச்குமாரும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் திரேச்குமார் மீது சந்தேகம் வராத நிலையில், கோமதியின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து,
பொலிசாரின் உதவியுடன் கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. இதையடுத்து திரேச்குமாரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்தனர்.
