பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேற்றுப்பட்டுள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என எதிர்பார்க்கப்பட்ட சேரன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.அப்போதே நிகழ்ச்சியின் மீதான பாதி நம்பிக்கை போயிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் ஷெரின் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தர்ஷனும் ஷெரினும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஷெரினுக்கு தர்ஷன் மீது ஒரு தலையாக காதல் இருந்தபோதும், தர்ஷனுக்கு வெளியில் காதலி இருப்பதை அறிந்து அதனை வெளிப்படுத்தாமல் இருந்து வந்தார்.பிக்பாஸ் கொடுத்த கடிதம் எழுதும் டாஸ்க்கின் போது கூட ஷெரின், தர்ஷனுக்குதான் கடிதம் எழுதினார். மேலும் தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஷெரினின் பேசிய காணொளி ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில் ஷெரின் 9ஆம் வகுப்பு படிக்கும் போது,

தனக்கு 10ஆம் வகுப்பு படிக்கும்மாணவன் ஒருவன் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் மற்றும் பள்ளித்தேர்வில் ஷெரின் டிஸ்டிங்ஷன் வாங்கியதும், அந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில்பெயிலான கதையும் உள்ளது.
இதேபோல்தான் தர்ஷனும் ஷெரின் பின்னால் சுற்றி வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகின்றது.
#VetriMaganKavinEntry#tharshan#tharsan #TharshanArmy
Appo puriyala…..eppo puriyuthu???? pic.twitter.com/PJYil8KP2J— Ramani_Ramani (@RamaniR81211540) September 28, 2019