குழந்தை சுர்ஜீத்தின் மரணத்திலிருந்து மீளாத தமிழகத்திற்கு மற்றும் ஒரு துயரம், நகைச்சுவை கலைஞர் மனோ இறப்பால் மூழ்கியுள்ளது. பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், நகைச்சுவை கலைஞருமான மனோ சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பலகுரலில் மிமிக்ரி செய்வதில் கில்லாடியாக திகழ்ந்த மனோ புழல் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏராளமான மேடைகளில் மக்கள் முன்னர் தோன்றி மிமிக்ரி செய்து அவர்களை தனது திறமையால் கட்டி போட்டுள்ளார். இந்நிலையில் சென்னை ஆவடியில் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மனோ உயிரிழந்துள்ளார்.

அவர் மனைவி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனோவின் மரணம் தொடர்பான செய்தியை பிரபல நடிகர் மனோபாலா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ
Once more loss…RIP Mano pic.twitter.com/m5dWKs9vaI
— manobala (@manobalam) October 29, 2019