சுர்ஜித்தின் சவப்பெட்டி குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போது நபர் செய்த கேவலமான செயல்: குவியும் வெறுப்புகள்

திருச்சி நடுங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுர்ஜித், 80 மணிநேர மீட்பு போராடத்திற்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டது தமிழகம் மட்டுமின்றி உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 25ம் திகதி வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன், எப்படியாவது மீண்டும் உயிருடன் வருவேண்டும் என தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடைப்பெற்றன. இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேராக பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைக்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுர்ஜித்தின் மறைவால் அவரது தாய், சகோதரன், தந்தை உட்பட குடும்பத்தினர் துயரத்தில் கதறினர். நடுக்காட்டுப்பட்டி அதை சுற்றியுள்ள கிராமத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர் இந்நிலையில், சுர்ஜித்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி அடக்கம் செய்ய குழிக்குள் வைக்ப்பட்டிருந்த போது, சுற்றி இருந்த நபர்களில் ஒருவர் தனது போனை எடுத்து, சவப்பெட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

தற்போது, குறித்த புகைப்படம் இணையத்தில் பரவ, பலர் அந்த நபரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிறிய குழந்தைக்காக துக்கப்படுவதற்கு கூட உங்களுக்கு இதயம் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருங்கள் என அதிப்தி வெளிப்படுத்தியுள்ளனர். சர்ச்சை ஏற்படுத்திய அப்புகைப்படம் இதோ