வண்ண வண்ணப் பூக்கள்’, ‘ஆத்தா உன் கோவிலிலே’ என 90’களில் வெளியான சில படங்களின் ஹீரோயின் தான் வினோதினி சினிமாவைத் தொடர்ந்து சிலகாலம் சீரியல்களிலும் நடித்தவர், வெங்கட் ஶ்ரீதர் என்கிற தொழிலதிபரைக் கரம்பிடித்ததும் நடிப்பதைக் கைவிட்டார். பின்னர் சீரியல்களில் நடித்தார். அவர் அளித்துள்ள பேட்டியில், கணவர் சொன்ன பிறகு தான் அக்னி நட்சத்திரம் தொடரில் கமிட் ஆனேன்.

ஆனா, சீரியல் தொடங்கிய ரெண்டே மாசத்துல என் கணவர் ஒரு விபத்தைச் சந்திச்சார். அந்த விபத்துதான் ‘திரும்பவும் நடிக்கலாம்’னு வந்த என்னை மறுபடியும் வீட்டுக்குள் முடக்கிப் போட்டுடுச்சு. டிரைவ் பண்றப்பகூட, ‘மத்தவங்க எப்படி வேண்ணாலும் வரலாம்; நாம கவனமா இருக்கணும்’னு சொல்றவர் அவர். அப்படிப்பட்டவர் விபத்துல சிக்கினார்னா அதுக்குக் காரணம் பிசினஸ்ல சில கோடிகளை ஏமாந்த மன அழுத்தம்தான். அஞ்சாறு வருஷமாவே இந்த அழுத்தத்துல இருந்தார். சஞ்சீவ், விக்ரம்னு அண்ணன் தம்பிங்க ரெண்டு பேர், தங்களோட வீட்டை புதுப்பிச்சுக் கட்டித்தரணும்னு என் கணவர்கிட்ட அக்ரிமென்ட் போட்டு, சில கோடிகள் பணத்தையும் வாங்கினாங்க.

அந்த வீட்டுப் பத்திரம் வங்கியில இருந்திருக்கு. பணத்தை வாங்கிட்டுப் போனவங்க, பத்திரத்தையும் மீட்கலை. அதனால அந்த வொர்க்கும் நடக்கலை. ‘சரி, பணத்தை திருப்பித் தந்திடுங்க’ன்னு கேட்கும்போது, தர மறுத்துட்டாங்க. விவகாரம் கோர்ட்டுக்குப் போய் எங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்திடுச்சு. அதன்பிறகும் ‘அப்பீலுக்குப் போவோம்’னு நிக்கிறாங்க. இந்தப் பிரச்னைதான் அவருக்கு பெரிய அழுத்தமா இருந்தது. விபத்து நடந்த அன்னைக்குக்கூட, அந்த விவகாரம் தொடர்பா பேசத்தான் போயிட்டிருந்தார். அதனால், அந்த விபத்துக்கு முக்கியக் காரணமானவங்கன்னு இவங்களைத்தான் சொல்வேன்.

விபத்து நடந்தப்பிறகு கூட, சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு பேர்கிட்ட நான் பேசினேன். ‘அக்ரிமென்ட் போட்டது உங்க கணவர்தானே; உங்களுக்கு இது தொடர்பா பேச உரிமையில்லை’ங்கிற பதிலைச் சொல்றாங்க. கோர்ட்ல தீர்ப்பு வந்த பிறகும் அதை ஏத்துக்காம, தொடர்ந்து என் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டிருக்காங்க. நாளைக்கு என் கணவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா, அந்த ரெண்டு பேர்தான் பொறுப்புங்கிறதை இந்த இடத்துல நான் பதிவு பண்ண விரும்பறேன் என கூறினார்.
