நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.ஒரு சில படங்களிலே மக்களுக்கு பிடித்த நடிகையாக மாறிப்போனார்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார். இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெளியானது அதன் பிறகு அதன் வெற்றியால் பெரிய படமாக மாறி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அது மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.இவர் கடைசியாக “ஏமாளி” திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாகவே கட்டி நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ;இந்தநிலையில் தற்போது ஜெய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஜெய்-க்கு ஜோடியாக அதுல்யா ரவி, வைபவி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சித்தார்த் விபின், சத்யன், தேவதர்ஷினி, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு இசையமைப்பாளராக சித்தார்த் விபினும், ஒளிப்பதிவாளராக ஜீவனும் பணியாற்றியுள்ளனர். அடல்ட் ரொமாண்டிக் காமெடி ஜானர் படமான இதனை ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. கதாநாயகனுக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு பெண்கள் என்ற நோக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக அதுல்யா இப்படிப்பட்ட மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை ரசிகர்களிடமும் கெட்ட பெயர் வாங்கிவிட்டார்.