உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு !! ட்ரெஸ்-ஐ கழட்டு என்றார் !! தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார் !!

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொ டுமைகள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும்

கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு தொந்தரவு கொடுத்ததாக டுவீட் ஒன்றை வெளியிட்டார். இதெல்லாம் அந்த சமயத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு வேறுவிதமாக பிரச்னைகள் பல ஏற்படும். குறிப்பாக சமீபத்தில் கூட பல நடிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை பற்றி மீடியாக்களில் பேசியிருந்தனர். இதற்கு சிலர் ஒத்துழைப்பு தருவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன என்ற கூற்றும் உள்ளது.ஹிந்தியில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் மஹ்லார் ரத்தோட்.தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சினிமாவுக்கு வாய்ப்பு கேட்டு செல்லும்போது தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.2008ல் கதாநாயகி ஆகும் ஆசையில் மும்பை வந்தபோது ஒரு தயாரிப்பாளரை சந்தித்துள்ளார். அந்த தயரிப்பாளருக்கு 65 வயது இருக்கும் அவர் என்னிடம் உன்னுடைய சினிமா என்ட்ரிக்கு நான் பொறுப்பு இப்போ உன் ட்ரெஸ்ச கழட்டு என்று கூறினார்.நான் அதிர்ந்துபோய் விட்டேன் செய்வதறியாது அங்கேயே நின்றேன் பிறகு உங்கள் சினிமா வாய்ப்பே வேண்டாம் என்று ஓடி வந்துவிட்டேன். என கூறியுள்ளார்.ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை அவர் கூறவில்லை.