தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு நடிகர்களின் வரத்து அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படத்திற்கு ஒருவர் வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இப்படி இருந்தாலும் நம் மனதில் நிலைத்து நிற்கும் நடிகைகளில் புன்னகை அரசி என்று சொல்லப்படும் நடிகை சினேகாவும் ஒருவர்.

நடிகை சினோகாவிற்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை ஒரு வித்தியாசமாக கணவர் பிரசன்னா புகைப்படத்தை பதிவிட்டு ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார்.இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி சினேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நடிகை, சினேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது குழந்தையை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியது, எனக்கு ஒரு அழகான தேவை பிறந்து உள்ளாள். என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.