மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பதினெட்டாம் படி.இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான ப்ரித்விராஜ்,மம்முட்டி,ஆர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் சோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நகுல் தம்பி.

இவர் மலையாள டிவி ஷோவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.20 வயதே ஆன இவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளது. இந்தநிலையில் இவர் தனது நண்பர்களுடன் மதுரை வந்துகொண்டிருந்தார்.அப்போது மதுரை அருகே வரும்போது எதிர்பாராமல் அவரகள் வந்த கார் பேருந்துமீது மோதியது.இதில் அவரும் அவரது நண்பரும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். நகுலுக்கு சற்று பலமாகவே அடி பட்டது.

மூளை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.இதுவரை சிகிச்சையிலேயே இருக்கும் நகுல் தம்பிக்கு 7 லட்சங்கள் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பணம் அதிகமாக செலவு ஆனதால் மருத்துவச்செலவுக்கு 15 லட்சம் வரை தேவைப்படுகிறது என நண்பர்கள் மூலமாக சமுக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.இதுவரை 23 லட்சங்களுக்கு மேல் பணம் வந்துள்ளதாக அவரது குடும்பத்தாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.