“தனுஷ் ஒரு ஊமை குசும்பு. எல்லாத்தையும் சத்தமே இல்லாம முடிச்சுருவார்” – பிரபல நடிகை பகீர் பேட்டி..!!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜின் “சுருளி” படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜின் “கர்ணன்” படத்திலும் தீவிரமாக நடித்துவருகிறார். இந்த அப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேனுடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து பொங்கலுக்கு வெளியாகி ஹிட்டடித்தது.

தமிழ் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் பற்றி பிரபல நடிகை கூறிய கமெண்ட் ஒன்று வைரலாகி வருகிறது.நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இந்த திரைபபடத்தில் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

ஏற்கனவே இவர் கவுதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்” நடித்தால் நடித்தது குறிப்பிடத்தக்கது.தமிழில் அதிகமான படங்கள் இல்லாவிட்டாலும் இந்த இரண்டு படங்களை பெரிதும் நம்பியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு ஒரு ஹீரோவையும் ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும். அப்போது அவர் விக்ரமை – ஸ்டைல் என்றும் தளபதி விஜயை – ஹாட் அண்ட் டான்ஸ் என்றும் தனுஷை – ஊமை குசும்பென்றும் வர்ணித்துள்ளார்.