உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தினசரி போலீஸ் மற்றும் மருத்துவர்கள் தங்கள் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் தங்களது பணிகளை செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் போலிஸாரின் பணி சிறப்பு மற்றும் வேதனைமிக்கது. குறிப்பிட்ட இக்காணொளியில் பெண் போலீஸ்க்கு ஏற்படும் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் அவர்கள் படும் கஷ்டத்தை பாருங்க இந்த வீடியோவில் காணலாம்.