கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்பதால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பெருமளவுக்கு கூடக் கூடிய இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தியேட்டர்கள் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. யாரும் நெருங்கி பழகி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நெருங்காமல் இருக்க வேண்டும், ஒருவருக்கு ஒருவர் தொடாமல் இருக்க வேண்டும் என்றால் இப்படி செய்யலாம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. இதுதான் அந்த படம்.. ஒருவர் இரும்பு கம்பியை தனது வயிற்றை சுற்றி கட்டிக் கொண்டிருக்கிறார். அது எப்படியும் இரண்டு அடி தூரத்துக்கு அருகாமையில் யாரையும் நெருங்க விடாத அளவுக்கு உள்ளது.

ஒருவேளை, யாராவது தும்மினால் கூட அது காற்றில் இவரிடம் வந்து சேரும் வாய்ப்பு கம்மி. யாரும் நெருங்கி பேச முடியாது, செம ஐடியாவாக இருக்கிறது. ஆனால் கோவில் படத்தில் கூடையை சுற்றிக்கொண்டு திரிந்த வடிவேலை நாய் குதறியது போன்று நடக்காமல் இருந்தால் சரி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இப்பதிவு அனைவரையும் சிரிக்க வைக்க மட்டுமே. காரோணவிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள அனைவரும் வெளியே வராமல் வீட்டிலிருந்தால் மட்டும் போதும். விழித்திரு…!! தனித்திரு..!!