இந்தியாவில் ஊரடங்கு முடிகிறது.! மே 17க்கு பிறகு என்ன நடக்கும்.? மோடி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட எடப்பாடியார்.! தமிழகத்திற்கு மட்டும் கிடையாதா..?

இந்தியா முழுவதிலும் 67,152 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 20,917 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 2,206 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டங்கள் அனைத்தும் பாதிப்புற்று ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் 3-ஆம் தேதியன்று சில தளர்வுகளுடன் 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 17-ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க கோரினார். மேலும் மே மாதம் 31ந் தேதி வரை தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை துவங்க கூடாது என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை துவங்கும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இதனால் தமிழகத்தில் இருந்து பிற நகரங்களுக்கு ரயில் சேவை துவங்குவது தாமதம் ஆகும் என்று தெரிகிறது.