விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15) அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து வரும் பு கை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது மாணவியை நெ ருப்பு கா யங்க ளுடன் கண்டுள்ளனர்

உடனடியாக மீட்டெடுத்து அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உ யிரிழ ந்துவிட்டார் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சி றுமி ஜெயஸ்ரீ சம்பவம் அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிர்நீர்த்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக் கொ டூர செயலை நான் கண் டிக்கி றேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடு மை யான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.