நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜதுரை (வயது 58) உஷா (வயது 52), இவர்களுக்கு விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர். தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை திட்டத்தில் வாய்ப்பு வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார்.

இந்நிலையில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து , அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பு தைத்து வைத்துள்ளார். இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோ ண்டிய போது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் தெரியப்படுத்தியுள்ளார். அப்போது, அவர் அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆண்டிலே மத்திய அரசு த டை செய்துவி ட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் கத றி அ ழுதனர்.
