பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக இரண்டு போட்டியாளர்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
முதலில் ஜித்தன் ரமேஷ் வெளியேற, நேற்று நிஷா வெளியேறி இருக்கிறார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது.
நேற்று ஷிவானி, ரம்யா, சோம், நிஷா ஆகியோரை அருகருகே அமரவைத்த கமல் ரம்யா காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து சோமையும் காப்பாற்றினார்.
#Archana அக்கா ஒரு
ஆஸ்கார் அவார்ட் பார்சல்.. ????#BiggBossTamil4 #BiggBossTamil#BiggBoss4Tamil pic.twitter.com/BhrNocNfRL— SATZ Sathiesh (@SataSathiesh) December 13, 2020
இதையடுத்து ஷிவானி, நிஷா இருவரும் இருந்த நிலையில் நிஷா வெளியேறியதாக அறிவித்தார். அவரது வெளியேற்றம் அர்ச்சனா, ரியோ ஆகியோருக்கு ஷாக்கிங்காக இருந்தது. எனினும் நிஷா பெரிதாக கவலையில்லாமல் வெளியேறினார்.
நிஷா கேட்டது போல ஐ லவ் யூ சொல்லவில்லை என்றாலும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி பிக்பாஸ் வழியனுப்பி வைத்தார்.
இதற்கிடையில் அனைவரும் சோக முகத்துடன் நின்று கொண்டிருக்க ரம்யாவுக்கு சிரிப்பு வந்தநிலையில், அவர் பாலாஜியை பார்த்து சிரிக்க பதிலுக்கு பாலாஜி அவரைப் பார்த்து சிரித்துள்ளார். அந்த இடத்தில் இப்படி சிரிக்கணுமா? என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ramya ????????????#BiggBossTamil#BiggBossTamil4pic.twitter.com/bd1T0J82oF
— Cinema Ticket (@CinematicketYT) December 13, 2020