பிக்பாஸிலிருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா வெளியிட்ட முதல் காணொளி..

பிக்பாஸ் வீட்டில் இருந்து அறந்தாங்கி நிஷா வெளியேறி இருக்கிறார். நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நிஷா வெளியேற்றப்பட்டு உள்ளார்.இதையடுத்து ஆரி, பாலாஜி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியலா மற்றும் ஷிவானி ஆகியோர் டாப் 10 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா அறந்தாங்கியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்ற வீடியோ தற்போது வெளியாகி இருந்தது.

கேக் ஒன்றில் வெல்கம் டூ அறந்தாங்கி என்று எழுதப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நிஷா காரில் இருந்து இறங்க அவருக்கு அவருடைய அம்மா ஆரத்தி எடுத்து அவருக்கு அதரவி தெரிவித்திருந்தனர்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிஷா முதன்முதலாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்புடன் இருந்து வந்தது மட்டுமின்றி ரியோவிற்கு அதிகமாக சப்போட் செய்து வந்தார். உள்ளே யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்று தனக்கென்று முடிவு ஒன்றினை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து தற்போது வெளியேறியுள்ள இவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.