கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டினால் புதையல் கிடைக்கலாம்… கனடாவில் என்ன கிடைத்திருக்கிறது பாருங்கள்..

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும்போது, சிலருக்கு புதையல் கிடைத்திருக்கிறது, சில நாடுகளில் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கிடைத்துள்ளன.

இம்முறை, கனடாவில் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது புதையலும் அல்ல, வெடிகுண்டும் அல்ல, ஒரு பீரங்கியே கிடைத்துள்ளது.

Amherstburg என்ற இடத்தில் பள்ளிக்காக கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது, முதல் உலகப்போர்க்கால ஜேர்மானிய பீரங்கி ஒன்றே கிடைத்துள்ளது.

இது ஒரு அரிய அபூர்வ கண்டுபிடிப்பு என்றும், இதுபோன்ற பீரங்கிகள் இப்போது உலகில் அதிகம் இல்லை என்றும் கூறியுள்ளார் அருங்காட்சியக ஊழியர் ஒருவர். அதை என்ன செய்வது, எங்கே வைப்பது என யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம் Amherstburg நகர அலுவலர்கள்.