“சேரி என்றாலே அப்படித்தான்”…. பிரிகிடாவின் சர்ச்சை பேச்சு….. அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்….!!!!

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்துள்ளார். ஆஹா கல்யாணம் வெப் சீரியஸ் மூலமாக பவி டீச்சர் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவின் நிழல் திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வந்த நிலையில் சமீபத்தில் அவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், இந்த கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும் தான் நடக்கின்றது. அதை ராகாக தான் சொல்ல முடியும். இப்போது நாம் ஒரு சேரிக்கு போனோம் என்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், “இடத்தைப் பொறுத்து மொழி மாறும் என்பதை நான் கூற வந்தேன்”என்று குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் பார்த்திபனும் பிரிகிடாவின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். எனது படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.