காதலை உறுதிப்படுத்திய பாவனி – அமீர் ஜோடி…. விரைவில் டும் டும்…. திருமணம் எப்போது தெரியுமா?…. இதோ பாருங்க…!!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகமானவர்கள் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் விலை உயர்ந்த மோதிரத்துடன் பாவணிக்கு அமீர் தன் காதலை கூறிய ப்ரோமோ  இணையத்தில் வைரலாகி அரங்கையே அதிர வைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அமீர் மற்றும் பாவணி இருவரின் உறவு நெருக்கமாகிவிட்டது.  இதனிடையே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி முடித்த பிறகு ஒட்டுமொத்த அரங்கமும் அதிரக்கூடிய வகையில் அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார். அதனைக் கண்டு பாவனி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அமீர் பாவணியிடம் மீண்டும் ப்ரோபோஸ் செய்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனி வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் காட்டப்படவில்லை. ஆனால் தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை அமீர் வெளியிட்டுள்ளார்.

அந்த ப்ரோமோவில் பாவணி வலது கை விரலில் மோதிரம் இல்லை. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள போட்டோவில் மோதிரம் இருக்கிறது . இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்து விட்டது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் திருமணம் எப்போது என்று அமீரிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதை இணையத்தில் வைரலாகி வருகிறது.