இன்ஸ்டாவில் பிரபல சீரியல் நடிகையை ஃபாலோ செய்யும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்…. அவங்க யார்னு நீங்களே பாருங்க…..!!!!

விஜய் டிவி சீரியல் அனைத்தும் மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பை பெறும். அதனைப் போலவே அதில் நடிக்கும் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் பரீட்சையமான முகமாக மாறிவிடுவார்கள். அவ்வகையில் அண்மையில் முடிந்த வேலைக்காரன் சீரியலில் வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சபரியும், வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி பிரியா,விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொடக்கத்தில் மெதுவாக சென்ற இந்த கதை நாளடைவில் விறுவிறுப்பாக சென்றது. அதில் பில்லி கனகா ரோலில் சீரியல் நடிகை திவ்யா மிரட்டி இருந்தார். அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்- க்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் instagram பக்கத்தில் அவர் வீடியோ வெளியிடுவார். இதனைப் பார்த்த மறைந்த நடிகர் விவேக் அவருக்கு ஃபோனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

இந்நிலையில் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ ஆர். ரகுமான் ஃபாலோ செய்து வருகிறார். இதனை திவ்யா மிகப்பெரிய பெருமை,ஆச்சரியம் மற்றும் நன்றியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திவ்யாவுக்கு இந்த இன்ப அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அதற்காக ஏ ஆர் ரகுமானுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.