அம்மாடியோ…. குக் வித் கோமாளி சீசன் 3…. டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா?….!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இதன் பைனல்ஸ் என்பதால் இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா தான் வின்னர் என்று தகவல் வெளியாகிறது. இந்நிலையில் அந்த வின்னருக்கு எவ்வளவு பரிசுத்தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வின்னருக்கு பத்து லட்சம் இந்த முறை பரிசுத்தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கடந்த சீசனில் வின்னர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை அளிக்கப்பட்டது.