இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் வீடியோ கவரேஜ்ஜை பிரபல ஓடிடித் தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியது. திருமணத்திற்கு அனைத்து செலவையும் அந்நிறுவனம் தான் செய்தது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட netflix நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் திருமணத்தன்று சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை குறைத்து விட்டார்.

அதனால் 25 கோடி ஒப்பந்தத்தில் இருந்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விலகியதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஃப்ரீ வெட்டிங் புகைப்படங்களை netflix வெளியிட்டு கூடிய விரைவில் வீடியோவாக வெளியாகும் என கூறியது.

இந்நிலையில் யார் யார்நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவுக்காக காத்திருக்கிறீர்கள் என்று கேட்டு netflix நிறுவனம் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளது. ஆனால் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த 25 கோடிக்கு நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கலாமே என்று தனது கருத்துக்களை கூறி வருகின்றன.