தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகராக பலம் வருபவர் கமல்ஹாசன். நடிப்பில் இவரது திறமையை மிஞ்ச தற்போதைய இளம் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் வேட்டையில் மாபெரும் வெற்றியை பெற்றது. உலகநாயகன் என்று புகழ் பெற்ற கமல்ஹாசன் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்தார்.

பின்னர் அதே வருடத்தில் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ தொடங்கினார். அதற்கு முன்பாக நடிகை கௌதமியின் தனது கணவரை விவாகரத்து செய்தார்.1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை கௌதமி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் தான் கமல்ஹாசன் உடன் வாழ தொடங்கினார் கௌதமி. இந்நிலையில் நடிகை கௌதமி மற்றும் சந்தீப் பாண்டியாவிற்கும் பிறந்த மகள் சுபலட்சுமி பாண்டியாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
