தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அவ்வகையில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாஸ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை ரசிகர்கள் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். சிறுவயதிலேயே ஹீரோயினி போல இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் இதோ..

