தமிழில் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஆக்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஆகான்ஷா பூரி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஒளிபரப்பான விநாயகர் பக்தி தொடரில் பார்வதி தேவியாக இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் பாடகர் மிகா சிங் மணமகளை தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் நடைபெற்றது. அதில் நடிகை ஆகன்ஹா பூரி உள்ளிட்ட 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஆகன்ஷா பூரிக்கு மாலை அணிவித்து தனது மனைவியாக தேர்வு செய்தார் மிகா சிங். பின்னர் பெற்றோரிடம் ஆசி பெற்றார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியாகின. அப்போது காதல் இல்லை என்றும் நண்பர்களாகவே பழகுகிறோம் என்றும் இவர்கள் விளக்கம் அளித்தனர்.
