நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை நடிகர் பிரசன்னா பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள பிரசன்னா, தனுஷ் அவரது பிறந்த நாளில் இன்னும் பெரிய உயரங்களையும் இன்னும் அதிகமான மகிழ்ச்சியையும் அடைய வாழ்த்து கூறுகிறேன்.

இந்த காட்சியை அவர் என் ரசிகர்கள் பகிர்ந்து கொள்வதை விட வேற என்ன அழகாக இருந்துவிட முடியும் என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி என்ற முதல் படத்தில் பிரசன்னா நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்று தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.