தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வளர்ந்து வரும் கலைஞர்களின் ஒருவர் தான் அருண் ராஜா காமராஜ். இவர் பாடலாசிரியர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக சினிமாவில் நுழைந்து தற்போது உயர்ந்து வருகிறார். சினிமாவில் உயர்ந்து வந்த இவருக்கு கொரோனா காலகட்டத்தில் வாழ்க்கையே சோகத்தில் மூழ்கியது.

அதாவது அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் அவர் உயிரிழந்தார். அந்த தாங்க முடியாத துயரத்தில் இருந்து அருண் ராஜா தற்போது மெல்ல மெல்ல வெளி வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது அருண் காமராஜ் புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கார் பக்கத்தில் தனது அம்மாவுடன் இன்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆடி மாச AUDI…???????????? happy for our dear nanban @Arunrajakamaraj ❤️❤️❤️ ???????????? pic.twitter.com/yExRyfkLte
— shankar-guna (@shankar_guna86) July 28, 2022