அப்பாவின் பர்த்டே…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சினேகா…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவர் இல்லத்தரசியாக இருந்து கொண்டு செலெக்ட்டிவ் ஆனா மற்றும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகாவின் தந்தை ராஜா ராமுக்கு நேற்று 70 வது பிறந்த நாள். தனது தந்தையின் பிறந்தநாளில் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று சினேகா விரும்பியுள்ளார். அதன்படி சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்துச் சென்று,அங்கிருந்து சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்த நாளை அவர் கொண்டாடியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜா ராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். அந்த நிகழ்ச்சியில் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை. மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு மதியம் பிரியாணி விருந்து அளித்தும் மகிழ்ந்தனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் மற்றும் மகள் இருவரும் கலந்து கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.