ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 திரையிடங்களில் வெளியிடப்பட்டது.

இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் நேற்று வெளியிட்டது. அதாவது தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் தீ லெஜெண்ட் திரைப்படம் நேற்று வெளியானது.

இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் கூல் சுரேஷ் யூடியூப் சேனல்களுக்கு படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.