பிரபல நடிகை வீட்டில் திருட்டு…. திருடனுக்கு நன்றி கூறி நடிகை வெளியிட்ட வீடியோ…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!!

பெங்களூரை சேர்ந்தவர் நடிகை நிரூசா. இவர் கன்னட படங்கள் மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் தான் ஆசையாக வளர்த்து வரும் நாய் ஒன்றுடன் தான் அதிக நேரம் இருப்பார். இந்நிலையில் அவர் வளர்த்த நாய் சமீபத்தில் காணாமல் போனது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது அம்மாவுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இருந்தாலும் பல நாட்கள் ஆகியும் அவருடைய நாய் திரும்ப கிடைக்கவில்லை.

இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான அவர் சாப்பிடாமலும் உறங்காமலும் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,நாயை திருடியவர்கள் தயவு செய்து கொண்டு வந்து திரும்ப கொடுத்து விட வேண்டும் என்றும் நாய் தொலைந்ததிலிருந்து தன்னால் சாப்பிடவும் தூங்கவும் முடியவில்லை என்று கதறி அழுது ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நாயை திருடிச் சென்ற திருடன் மீண்டும் நடிகையின் வீட்டிற்கு அருகே நாயை வைத்து விட்டு ஃபோன் செய்து நாயை விட்டு விட்டதாக கூறியுள்ளார். பின்னர் நிரூசாவும் அவருடைய அம்மாவும் வெளியே வந்து நாயை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தனர். நாய் கிடைத்த மகிழ்ச்சியில் மீண்டும் நடிகை தனது இன்ஸ்டவில் நாயை கொண்டு வந்து கொடுத்த நபருக்கு நன்றி கூறி வீடியோவை பதிவு செய்துள்ளார்.