தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி வரும் இவர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது 30 போட்டோ கிராபர்கள் ஒரே தடவையாக அவரை போட்டோ எடுத்து இருக்கின்றனர்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கத்தில் அதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டிருந்தது. அதன்படி மூவாயிரம் புகைப்படக்காரர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றிற்கு வருகை தந்தனர். கின்னஸ் சாதனைக்காக மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி புகைப்படக்காரர்கள் அனைவரும் தங்கள் கேமராவை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த ரோஜா மேடை ஏறி ஓகே என்று சொன்னவுடன் மூவாயிரம் போட்டோகிராபர்கள் ஒரே கிளிக்காக ரோஜாவை போட்டோ எடுத்தனர். இதுவரை யாரும் இப்படியான முயற்சியை செய்ததில்லை என்பதால் அமைச்சர் ரோஜா ரோஜா செய்த இந்த சாதனை வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.