தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் உருவாகி வரும் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்குகிறார் என தகவல் வெளியாகிறது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழில் 15 கோடி சம்பளம் வாங்கி வரும் இவருக்கு பாலிவுட்டில் இரண்டு மடங்கு சம்பளம் கூடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
