தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். கிராமத்துக் கதையை மையப்படுத்திய அந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் முத்தையா மற்றும் கார்த்திக் கூட்டணி இணைந்துள்ளது.

அதன்படி கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை மதுரையில் நடைபெறுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் “கஞ்சா பூ கண்ணால”என்ற பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் பாடல் சமீபத்தில் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் விருமன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா படக்குழுவினருடன் கலந்து கொள்கிறார்.

அதற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.