நடிகர் நகுல் மகளின் 2-வது பிறந்தநாள்…. எப்படி கொண்டாடினார்கள் தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி உள்ளிட்ட படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் நகுல். அந்தப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஓரளவு வெற்றியை கொடுத்தன. இருந்தாலும் நகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாரதன், செய் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் நகுலின் மார்க்கெட் பெரும்  பாதாளத்திற்கு சென்று விட்டது.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் பலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தேவயானியின் உடன் பிறந்த தம்பி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தம்பதி இவர்கள்தான். தனது வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். நகுல் மனைவி கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறந்தது வரை அனைத்து வீடியோக்களையும் அவர் இணையத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் தனது மகளின் இரண்டாவது பிறந்த நாளை மிக எளிமையான முறையில் வீட்டில் கொண்டாடியுள்ளனர். சிறிய அளவில் இரண்டு கேக்குகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிறந்த நாளை கொண்டாடினர். அந்த வீடியோவை நகுல் இணையத்தில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)