தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளன. இவர் நடிப்பதை தாண்டி மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் நடிப்பு மற்றும் மற்ற திறமைகளை ரசிப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் திரை உலகில் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளார். அதனால் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளை கடந்ததைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியின் ப்ரென்ச் சிட்டி அஜித் குமார் ரசிகர்கள் ஆள் கடலுக்குச் சென்று பேனர் வைத்துள்ளனர்.

ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் ஸ்கூபா டிரைவிங் மூலம் 60 அடி ஆழத்திற்கு சென்ற ரசிகர்கள் இருவர் அங்கு அஜித்தின் படம் உள்ள பேனரை வைத்து வித்தியாசமாக கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.