“இன்னும் அப்படியே இருக்கு”…. நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த அழகிய வீடு…. பலரும் பார்த்தீராத புகைப்படம் உள்ளே….!!!!

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தமிழகத்தில் இவரது ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். இவரது பெயரை சொன்னால் யாருமே தெரியாது என்று சொல்ல முடியாது.

அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக பேசப்பட்டவர். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. அப்படிப்பட்ட இவர் இப்போதும் இருந்திருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். மக்களின் பேராதரவை பெற்ற இந்த மாமனிதர் சிலைகள் தமிழகத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் உள்ளது.

பல்வேறு புகழுக்குரிய எம் ஜி ஆர் அவர்கள் இலங்கையில் கண்டு என்ற இடத்தில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு அவர் வசித்து வந்த வீட்டின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அன்று இருந்த அளவிற்கு அச்சு அசல் மாறாமல் இன்றும் அந்த வீடு அப்படியே உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.