அனைவரும் எதிர்பார்த்த அந்த நாள்…. வெளியானது பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ….. படு குஷியில் ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது.

தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழிலும் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.