செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா…. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் முதல்முறையாக அதுவும் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். முதல் பஸ் ஸ்டாலின் மற்றும் பிரதமர் இந்தப் போட்டி தொடங்கியது. ‘

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருந்தன. அப்போது அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ் தாய் வாழ்த்து பாடி அசத்தியுள்ளார்.

இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடிய நிலையில் அது பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.