நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே அவர்களது திருமணம் நடந்தது. திருமணத்தில் நயன்தாரா சிகப்பு நிற சேலையில் வைரம் பதித்த ஆபரணங்களை அணிந்து தேவதை போல காட்சியளித்தார்.

அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் பலரும் நயன்தாரா திருமண உடையை போல தாங்களும் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடையை போல தானும் உடை அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார். பிரபல காமெடி நடிகையான இவர் கிரி மற்றும் படிக்காதவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் நயன்தாரா கல்யாண உடையை போலவே தானும் ஒரு உடையை அணிந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புறம் நயன்தாராவின் திருமண புகைப்படமும் மறுபுறம் நயன்தாரா போட உடை அணிந்து ஆர்த்தி இருக்கும் புகைப்படமும் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கேப்ஷனில் “என்ன கொடுமை இது” Exception vs reality என்று அவரை அவரே கலாய்த்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த விக்னேஷ் சிவன் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில், நீங்கள் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு கமெண்டு செய்து அதிகளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
