தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assistant, Driver (Mobile Medical Unit), Cleaner (Mobile Medical Unit), Auxiliary Nursing Midwife, Dental Assistant மற்றும் Lab Technician ஆகிய பணிகளுக்கு 21 பணியிடங்கள் உள்ளது.
கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Diploma, MBBS,BDS, BPT, ITI, DMLT, CMLT, Post Graduate Degree.
வயது வரம்பு: Data Entry Operator, Hospital Worker, Diver மற்றும் Cleaner ஆகிய பணிகளுக்கு 18 – 35 வயதிற்குள், மற்ற பணிகளுக்கு 23 வயது முதல் 35 வயதிற்குள்.
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.6,500 முதல் ரூ.35,000 வரை.
தேர்வு செய்யும்முறை: தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் https://dharmapuri.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 18
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://dharmapuri.nic.in/tourist-information/