ரஜினி எப்படி திரைக்கு வந்தார்?…. பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த முதல்வர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார். இவர் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பள்ளி குழந்தைகளை நேரில் சந்தித்து மூவர்ணக் கொடி மற்றும் சுதந்திரம் அடைய போராடிய வீரர்கள் பற்றி பேசினார்.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து விவரித்து அவர் பாடம் எடுத்துள்ளார். திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் எப்படி திரை உலகிற்கு வந்தார் என்பது குறித்து மாணவர்களுக்கு முதல்வர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.