தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார். அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவருக்கு சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகி வந்தாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைப்பதற்கு அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக பெண் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள எஸ் ஜே சூர்யா, “திருமணம் எனக்கு நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இப்போது என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கின்றது. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை என்று அவர் ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.