“இந்த இடத்தை கூட விடலையா”…. இணையத்தை தெறிக்க விடும் நயன் – விக்கி எடுத்த லேட்டஸ்ட் photos….

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று முன் தினம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் தேசிய கொடியை பிடித்தபடி கொண்டாடினர்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.இதனைத் தொடர்ந்து நயன்தாரா நெற்றியில் ரொமான்டிக் மூடில் காதல் பொங்க விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியானது.அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

பார்சிலோனா தெரு வீதிகளிலும் சந்துகளிலும் இருவரும் டூயட் ஆடுவது போல விதவிதமான போட்டோ சூட் நடத்தியுள்ளனர். அந்தப் புகைப்படத்தில் தொடை தெரிய அணிந்துள்ளார் நயன்தாரா. ஒவ்வொரு சந்தாக இருவரும் இணைத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.