சீரியலில் நடிகையோடு அதிக ரொமான்ஸ் செய்யும் கணவர்… கோபப்பட்ட பூவே பூச்சூடவா நடிகர் மனைவி

கடந்த 2 வருடமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே பூச்சூடவா. இதில் நடித்து வரும் தினேஷ்-ரேஷ்மா ஜோடிக்கென்று தனி ரசிகர்கள் இருந்தார்கள். தினேஷ் சிவா என்ற கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து தினேஷ் திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக கார்த்தி வாசு நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் செம ஹிட் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலில் இருந்து விலகியுள்ளார் நாயகன் தினேஷ். அவருக்கு பதிலாக இப்போது கார்த்திக் வாசு என்பவர் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சில சீரியல்கள் மூலம் மக்களுக்கு பிரபலமானவர் தான். இவர் நாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து ஒரு பேட்டியளித்துள்ளார்.  அதில், இந்த சீரியலில் நடிக்கும் போது முதலில் மக்கள் செட் ஆகவில்லை என்றனர், ஆனால் இப்போது நல்ல விமர்சனங்கள் வருகிறது.

இப்போ பூவே பூச்சூடவா சீரியலில் நாயகியும் நானும் கண்களாலேயே ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. அதைப்பார்த்து என் மனைவி என்ன இப்படி ரொமான்ஸ் செய்கிறீர்கள்

என்று கோபப்பட்டார்.  இது சீரியலுக்காக என்று அவரை சமாதானப்படுத்தினேன், ஆனால் நிஜமாகவே இந்த வேடம் கிடைத்ததற்கு என்னை விட என் மனைவி தான் ஹேப்பி என்று கூறியுள்ளார்.